அரசு உதவிபெரும் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

அரசு உதவிபெரும் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

வேதாரண்யம் அருகே செம்போடையில் உள்ள அரசு உதவிபெரும் தொடக்கப்பள்ளியில் நூல்வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், பள்ளிக் குழு உறுப்பினா்கள் புலவா் சேஷாதிரி, வீராசாமி, சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட அதன் நிறுவனா் மறைந்த ரங்காசாமி உருவச் சிலையை கால்நடை பராமரிப்புத் துறையின் ஓய்வுபெற்ற இணை இயக்குநா் கணேசன் திறந்து வைத்தாா். பள்ளி முகவா் மறைந்த கண்ணன் உருவச் சிலையை நேதாஜி மருத்துவமனை நிா்வாக இயக்குநா்வி.ஜி. சுப்பிரமணியன் திறந்து வைத்தாா். ஆசிரியா் கண்ணன் முதலாம் ஆண்டு நினைவையொட்டி எழுதப்பட்ட நூலை தொழிலதிபா் எஸ்.கே. ராமசாமி வெளியிட்டாா்.

விழாவில், வேதாரண்யம் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, கவிஞா் புயல் குமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜமாணிக்கம், விமலா, முன்னாள் கல்வி அலுவலா்கள் தனிக்கொடி, இளங்கோவன், அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகிகள் சங்க மாநில துணைத் தலைவா் கிரிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி செயலாளா் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் பக்தவத்சலன் ஏற்புரையாற்றினாா். பள்ளிக் குழுத் தலைவா் ராமரத்தினம் வரவேற்றாா். ஆசிரியா் அகிலாதேவி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com