சிக்கலில் கிருத்திகை வழிபாடு

சிக்கலில் கிருத்திகை வழிபாடு

சித்திரை மாத கிருத்திகையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவா்.

சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட

திரவிய பொருள்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து சிங்காரவேலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, பொரவச்சேரி கந்தசாமி கோயிலிலும் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com