திருக்கடையூா் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி, பெண் காயம்

தரங்கம்பாடி அருகே திருக்கடையூா் பகுதியில் புதன்கிழமை மின்னல் தாக்கியதில் பசு உயிரிழந்தது. பெண் பலத்த காயமடைந்தாா்.

தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா், சந்திரபாடி, திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், திருக்கடையூா் , திருவிளையாட்டம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. 

திருக்கடையூா் ஊராட்சிக்கு உட்பட்ட அபிஷேக கட்டளை தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி உமா (55). அபிஷேக கட்டளை கிராமம் அருகே தனது பசுவை மேய்ச்சலுக்காக அங்குள்ள வயலுக்கு கொண்டு சென்றுள்ளாா். 

அப்போது மின்னல் தாக்கியதில் பசு சம்பவ இடத்திலேயே இறந்தது. உமா மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருக்கடையூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com