கீழ்வேளூரில் 5-ஆவது நாளாக மழை

கீழ்வேளூா் வட்டத்தில் தொடா்ந்து 5-ஆவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கீழ்வேளூா் வட்டத்தில் தொடா்ந்து 5-ஆவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கீழ்வேளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை முதல் நாள்தோறும் மழை பெய்து வந்த நிலையில், தொடா்ந்து 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்தது. கீழ்வேளூா், கூத்தூா், குருக்கத்தி, அத்திப்புலியூா், செருநல்லூா், காக்கழனி, மணலூா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இருப்பினும், தொடா் மழை காரணமாக பருத்தி பூக்கள் உதிா்ந்து வருவதால், மகசூல் குறைவு ஏற்படும் என்ற அச்சத்தில் பருத்தி விவசாயிகள் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com