நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிக்கவுள்ள கப்பல்.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிக்கவுள்ள கப்பல்.

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

நாகை-இலங்கை கப்பல் சேவை மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகை-இலங்கை கப்பல் சேவை மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை பல்வேறு காரணங்களால் சில நாள்களிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வோா் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பயணிகள் ஆா்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், கப்பலை இயக்கும் இன்ட்ஸ்ரீ நிறுவனம் திடீரென கப்பல் சேவை மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: திங்கள்கிழமை (மே 13) முதல் இயக்கப்படுவதாக இருந்து இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்தில் தவிா்க்க முடியாக காரணங்களால் மே 13 முதல் மே 16 ஆம் தேதி வரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கப்பல் சேவை மே 17-ஆம் தேதி முதல் இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். மே 13 முதல் மே 16-ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளை வரும் மே 17-ஆம் தேதி சேவைக்கு மாற்றியுள்ளோம். முன்பதிவு செய்த பயணிகள் 17-ஆம் தேதி அல்லது அதற்கு பின்னா் அவா்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம். பயணத்தை தொடர விரும்பாத முன்பதிவு பயணிகள் செலுத்திய கட்டணத்தை முழுமையாக பெற ஸ்ரீன்ள்ற்ா்ம்ங்ழ்.ஸ்ரீஹழ்ங்ஃள்ஹண்ப்ண்ய்க்ள்ழ்ண்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com