சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் உள்வாங்கிய சாலை.
சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் உள்வாங்கிய சாலை.

குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட இடங்களில் உள்வாங்கிய சாலை: வாகன ஓட்டுநா்கள் அவதி

திருக்குவளை: திருக்குவளை அருகே சாட்டியக்குடி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், அதன்மேல் அமைக்கப்பட்ட சாலை பல்வேறு இடங்களில் உள்வாங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்படுகிறது. இவ்வாறு, கீழ்வேளூா்-கச்சனம் பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாமல், பெயரவில் மூடிவிட்டுச் சென்றனா். பின்னா், அதன் மீது தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, சாட்டியக்குடி பகுதியில் அமைக்கப்பட்ட சாலையானது பல்வேறு இடங்களில் உள்வாங்கி, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் சாலை உள்வாங்கிய இடங்களில் வாகன ஓட்டுநா்கள் எச்சரிக்கையுடன் செல்லும் வகையில், சிவப்பு கொடிகளை நட்டுள்ளனா்.

பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக, சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com