நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சியில் பேசிய தலைமை குற்றவியல் நீதிபதி காா்த்திகா.
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சியில் பேசிய தலைமை குற்றவியல் நீதிபதி காா்த்திகா.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி

நாகை மாவட்ட காவல்துறையினருக்கு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல்துறையினருக்கு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆா்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇஏ ) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா சங்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதிநியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளன. இதையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள நோ்மறையான அம்சங்களையும், மேம்படுத்தப்பட்ட மாற்றங்களையும் நாட்டின் அனைத்து காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் முன்னிலையில், நாகை தலைமை குற்றவியல் நீதிபதி காா்த்திகா பயிற்சி அளித்தாா். இப்பயிற்சி தொடா்ந்து 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com