கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம்: 1.45 கோடி மகளிா் பயன்

நாகை மாவட்டத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 1.45 கோடி மகளிா் பயன்பெற்றுள்ளனா்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டதின் மூலம் தமிழகத்தில் அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெற்று வருகின்றனா். அந்தவகையில், நாகை மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் 1,45,47,292 மகளிா் பயன்பெற்றுள்ளனா்.

இத்திட்டம் குறித்து வேலைக்கு செல்லும் மகளிா் கூறியது:

தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எங்களுக்கு, மாதவருமானம் போதுமானதாக இல்லை. இதில் போக்குவரத்து செலவிற்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்க வேண்டும்.

தற்போது செயல்பட்டு வரும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் மூலம் பேருந்து கட்டணத்தை சேமிக்க முடிகிறது. இந்த தொகை பல்வேறு வகையில் உதவியாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய முதலவருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com