தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

செல்லமுத்து மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

கீழ்வேளூா் அருகே இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 12-ஆம் தேதி பால்குடம் மற்றும் காவடி வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து செல்லமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் மணி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விரதமிருந்து காப்பு கட்டிகொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் குதிரை சேவகளாா் ஆற்றுப்பாலத்தில் சக்தி கரகம் எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா் கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com