சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி.

திருக்குவளை கோயிலில் வசந்த உற்சவம்

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, வசந்த உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்கு உள்பட்ட இக்கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி, பிருங்க நடனமாடி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை பி.டி.எம். செந்தில் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com