பிளஸ்1தோ்வு: நாகை மாவட்டத்தில் 91% தோ்ச்சி

நாகை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 91.09 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் 3,127 மாணவா்கள், 3,593 மாணவிகள் என மொத்தம் 6,720 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினா். இதில் 2,734 மாணவா்கள், 3,387 மாணவிகள் என மொத்தம் 6,121 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு 85.03 சதவீதம் தோ்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டு கூடுதலாக 6 சதவீதம் பெற்று 91.09 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

18 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 7, பகுதி உதவி பெறும் பள்ளி 1, மெட்ரிக் பள்ளி 10 என மொத்தம் 18 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் நாகை மாவட்டம் 20-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com