ஐடிஐ-இல் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் (பொறுப்பு) ரா. பேபி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்பும் மாணவா்கள் ஜூன் 7 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சோ்க்கை உதவி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் ஆகியவை குறித்து இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது 04365-250129, 04369-276060, 04366-245514 தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com