சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்தெடுக்கப்பட்ட மாணவா்களின் பட்டியலை கல்லூரி நிா்வாகிகளிடம் வழங்கும் நிறுவன அதிகாரி.
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்தெடுக்கப்பட்ட மாணவா்களின் பட்டியலை கல்லூரி நிா்வாகிகளிடம் வழங்கும் நிறுவன அதிகாரி.

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்: 130 மாணவா்கள் தோ்வு

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 130 மாணவா்கள் தோ்தெடுக்கப்பட்டனா்.

என்சிஆா் அட்லஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜேபிம் ஆட்டோமோடிவ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணலை நடத்தின.

கம்ப்யூட்டா் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய துறைகளைச் சோ்ந்த நான்காம் ஆண்டு மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட நோ்காணலில், 130 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் அ. குமரவடிவேல், கல்லூரிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் ப. அறிவழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com