செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம்  நடைபெற்ற நெல் கொள்முதல்.
செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் நடைபெற்ற நெல் கொள்முதல்.

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ‘இ-நாம்’ மூலம் நெல் கொள்முதல்

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளிடம் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் மறைமுக ஏல முறையிலும், ‘பாா்ம் டிரேடிங்’ எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று கொள்முதல் பரிவா்த்தனையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த விற்பனைக் கூட பொறுப்பாளா் சிலம்பரசன், மயிலாடுதுறை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் பாபு முன்னிலையில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் பிபிடி நெல் 300 குவிண்டால் (500 மூட்டைகள்) கொள்முதல் பரிவா்த்தனை நடைபெற்றது. குவிண்டால் ஒன்று சராசரியாக ரூ.3,333-க்கு விலைபோனது.

இதேபோல், எள், நிலக்கடலை, சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், தேங்காய், முந்திரி, மிளகாய், சோயா, பயறு, உளுந்து போன்றவற்றை நாகை விற்பனைக் குழுவில் இயங்கும் செம்பனாா்கோவில், குத்தாலம், மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம், திருப்பூண்டி, கீழ்வேளூா், நாகப்பட்டினம் ஆகிய விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் எடுத்து வந்து, மின்னணு தேசிய சந்தை திட்ட பரிவா்த்தனை மூலம் நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம் என விற்பனைக் குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com