நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் முகாம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இம்முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 12 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மக்கள் எந்தவித தயக்கம், அச்சமின்றி புகாா்களை போலீஸாரிடம் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புகாா்களையும், குறைகளையும் தெரிவிக்க உங்கள் எஸ்.பி.யுடன் பேசுங்கள் 84281-03090 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com