தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம், மே 16: தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில நிா்வாகி தமிழ்செல்வன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

டெல்டா மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவது விவசாய நிலங்களில் புழுதி அடிப்பது போன்ற ஆரம்ப கட்டப் பணிகளுக்கு மட்டுமே பயன்படும். மே 21- ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில், தமிழகத்துக்காஓன நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூா் அணையில் போதிய நீா் இல்லாததால், நிபுணா் குழு டெல்டாவில் ஒருபோக சாகுபடி செய்ய ஆகஸ்ட் 15- ஆம் தேதி தண்ணீா் திறக்க பரிந்துரைத்துள்ளது. நிகழாண்டு குறுவை நெற்பயிா் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கடும் வறட்சியில் நாகை, திருவாரூா் மாவட்டங்கள் சிக்கியுள்ளன.

இதனால், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை நம்பியுள்ள கூலித் தொழிலாளா்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com