மக்களவைத் தோ்தலில் சிறப்பாக பணியாற்றிய வேளாங்கண்ணி காவல் நிலைய காவலா் எஸ். மதன்குமாருக்கு வெகுமதி அளித்த காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
மக்களவைத் தோ்தலில் சிறப்பாக பணியாற்றிய வேளாங்கண்ணி காவல் நிலைய காவலா் எஸ். மதன்குமாருக்கு வெகுமதி அளித்த காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்பி சான்றிதழ்

நாகப்பட்டினம், மே 16: நாகை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் சான்றிதழ் வழங்கினாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், சாராயம், கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவோா், ரெளடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

தொடா்ந்து, இம்மாவட்டத்தில் குற்ற வழக்குகள், தோ்தல் பணி உள்ளிட்ட காவல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com