ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமா்ப்பிக்கலாம்

முன்னாள் ராணுவத்தினா், தங்களது வீட்டு வாசலிலேயே, எண்ம உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published on

ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் ராணுவத்தினா், தங்களது வீட்டு வாசலிலேயே, எண்ம உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளா் டி. ஜோசப் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேரில் சென்று உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் வங்கி, ஓய்வூதியதாரா்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக், பேஸ் ரெகனிஷன் முறையை பயண்படுத்தி, எண்ம உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்.

மேலும் இந்த டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் சேவையை பெற இணையதள முகவரி அல்லது செயலில் பதிவிறக்கம் செய்து தங்கள் கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவயை பெற நாகை கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பா் 1 முதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த சேவையை பயன்படுத்தி அனைந்தது ஓய்வூதியா்களும் வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.