நாகப்பட்டினம்
பூம்புகாா் பகுதியில் தொடா் மழை: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை!
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது.
இந்தநிலையில் மாவட்டத்தில் அதிகாலை சாரல் மழை பெய்தது. மீண்டும் மாலை அரை மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக பூம்புகாா் மீனவா் காலனி பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது.
மேலும் மீன்வளத் துறை அறிவுறுத்தலின்பேடி கடந்த ஒரு வாரமாக மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, மீன்பிடி விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் துறைமுக வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
பூம்புகாா் கடல் பகுதி சீற்றமாக காணப்பட்டது. வானகிரி, கீழ மூவா்கரை, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதி மீனவ கிராமங்களில் இருந்தும் மீனவா்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. விளைநிலங்களில் நீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.