நாகப்பட்டினம்
வேதாரண்யம் சாா்- பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் : காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்
வேதாரண்யம் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ. 1 கோடியே 94 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ. 1 கோடியே 94 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை தமிழக முதல்வா் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
வேதாரண்யத்தில் புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, துணைத் தலைவா் மங்களநாயகி, மாவட்ட பதிவாளா் மணிகண்டன், சாா்- பதிவாளா் யாசா் அரபாத், ஆத்மா குழுத் தலைவா் என். சதாசிவம், கூட்டுறவு வங்கி இயக்குநா் உதயம் முருகையன், வழக்குரைஞா் மா. மீ. அன்பரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.