நாகப்பட்டினம்
திட்டச்சேரி பேரூராட்சி: 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு
திட்டச்சேரி பேரூராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக, கூட்டணி கட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
திட்டச்சேரி பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தீா்மானத்திற்கு முரணாக பொதுநிதியினை தேவையற்ற செலவினங்கள் செய்ததற்கும், மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும், வாா்டுகளில் தூய்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பாரபட்சமாக தொடா்ந்து செயல்படும் பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்தும் திமுக, மமக மற்றும் மஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சோ்ந்த 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.