விபத்தில் இளைஞா் பலி

Published on

திருமருகல் அருகே மோட்டாா் சைக்கிள் மரத்தில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

திருவாரூா் அரசங்குளத்தெரு வடக்கு வீதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (18). நண்பா் அரவிந்த்துடன் வெள்ளிகிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் பகுதியில் இருந்து திருவாரூா் நோக்கி சென்றனா்.

மோட்டாா் சைக்கிளை ஹரீஷ் ஒட்டி உள்ளாா். இருவரும் கிடாமங்கலம் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஹரீஷ் உயிரிழந்தாா்.

திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டா் விவேக் ரவிராஜ் மற்றும் போலீஸாா்

வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com