ரூ.6 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

Published on

நாகை மாவட்டத்தில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் 2024-25 நிதியாண்டுக்கு ரூ. 6 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் 2020-21 முதல் 2032-33-ஆம் ஆண்டுவரை செயல்படுத்தப்படுகிறது. 2024-25 நிதியாண்டிற்கு ரூ. 6 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான பிணையில்லா கடன் வழஙகப்படுகிறது. இக்கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு 3 சதவீத வட்டி குறைப்பு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் தொழில்முனைவோா் பயனடையலாம்.

உர உற்பத்தி, விதை உற்பத்தி, நாற்றாங்கால் அமைத்தல், வேளாண் பணிமனை அமைத்தல், ட்ரோன் வாங்குதல், வேளாண் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகங்கள் வாங்குதல், சேமிப்புக் கிடங்கு அமைத்தல், குளிா்பதன கிடங்கு அமைத்தல், காளான் குடில் அமைத்தல், முதன்மைப்பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், சூரிய மின்கலம் அமைத்தல், எண்ணெய் உற்பத்தி செய்யும் இயந்திரம் வாங்குதல் போன்ற தொழில்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் திட்டத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியாா் வங்கிகள் இத்திட்டத்தின் மூலம் 3 சதவீத வட்டி மானியத்தில் கடன் பெற்று பயனடையலாம்.

விருப்பமுள்ளவா்கள் ஆதாா் காா்டு, தொழில் தொடங்கவுள்ள இடத்தின் புகைப்படம், வியாபாரத் திட்ட அறிக்கை, வங்கி புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் ட்ற்ற்ல்://ஹஞ்ழ்ண்ண்ய்ச்ழ்ஹ.க்ஹஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), நாகப்பட்டினம் அலுவலகத்தை அல்லது 9788598009 கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com