பெண் பயிற்சி மருத்துவா் கொலை: மெழுவா்த்தி ஏந்தி அரசு ஊழியா்கள் போராட்டம்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கில் நீதி கிடைக்க வலியுறுத்தி, நாகையில் அரசு ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
Published on

நாகப்பட்டினம்: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கில் நீதி கிடைக்க வலியுறுத்தி, நாகையில் அரசு ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.வளா்மாலா தலைமையில், மெழுகுவா்த்தி ஏந்தி பங்கேற்றனா். அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் அ.தி. அன்பழகன் விளக்கவுரையாற்றினாா்.

கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நாகை தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் சு. சிவகுமாா், அரசு ஊழியா் சங்க மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் வெ.சித்ரா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com