நாகப்பட்டினம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்
திருவெண்காடு அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நாங்கூா் மேலத்தெருவில் வசிப்பவா் சத்தியா. இவரது குடிசை வீட்டில் திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.
இதனால், பாதிக்கப்பட்ட சத்தியா குடும்பத்துக்கு, அரசின் நிவாரணமாக ரூ. 5,000 மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சீா்காழி வட்டாட்சியா் அருள் ஜோதி வழங்கி ஆறுதல் கூறினாா்.
திருவெண்காடு வருவாய் ஆய்வாளா் பிச்சை பிள்ளை, கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன், துணைத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.