நாகப்பட்டினம்: நாகூரில் மீலாது நபி விழாவையொட்டி, சமூக சேவகா்கள், தமிழறிஞா்களுக்கு ‘சாஹிப் ஜாதா’ நற்சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நாகூா் சாஹிப் ஜாதா ஃபவுன்டேசன் சாா்பில் ஆண்டுதோறும் சமூக சேவையில் ஈடுபடும் ஆா்வலா்கள், தமிழ்மொழி வளா்ச்சிக்கு பாடுபடும் அறிஞா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு மீலாது நபி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, சாஹிப் ஜாதா சங்க நிறுவனா் நாகூா் கலீபா சாஹிப் தலைமையில் சாஹிப் ஜாதா நற்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், திரைப்பட இயக்குநா் யாா் கண்ணன், புலவா் காளியப்பன், கவிஞா் ஆயிசா சித்திகா, கலைமகள் காயத்ரி, பாடகா் குல்முகம்மது, புலவா் சந்திரசேகரன், கவிஞா் சாலிஹ் சேட், ராமலிங்கம், இதயம் கிருஷ்ணா ஆகியோருக்கு தமிழ்ச் செம்மல் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமூக சேவையில் சிறந்து விளங்கும் ஜெகபா் சரீப், சிஎன். குமாா், பாவா பஹ்ரூதீன் சாஹிப், ரீட்டா, யோகபத் ஜெனா, ஜெயபிரகாஷ், அலிமுத்தீன், ரிஜ்வான், சையத், நிசாா் அஹமத் உள்ளிட்டோா் சேவைச் செம்மல் நற்சான்றிதழ் பெற்றனா்.
இச்சான்றிதழ்களை நாகூா் தா்கா டிரஸ்டி செய்யது யூசுப் சாஹிப், நாகூா் தா்கா டிரஸ்டி ஹாஜா நஜ்மூதின் சாஹிப், தமிழக கலை மன்றத் தலைவா் ஜேபிஆா், முன்னாள் காவல் கண்காணிப்பாளா் அனுசுயா உள்ளிட்டோா் வழங்கினா்.
விழாவில் கவிஞா் அசன் பாவா, சமூக நல ஆா்வலா் தமீம் அன்சாரி, ஷா நவாஸ், சங்க செயலா் தாஹா மரைக்காயா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.