செம்பனாா்கோவில் அருகே மாத்தூரில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம் -
பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்
செம்பனாா்கோவில் அருகே மாத்தூரில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம் - பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

2 குடிசைகள் தீக்கிரை: பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவி

செம்பனாா்கோவில் அருகே மாத்தூரில் 2 குடிசைகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையாகின.
Published on

செம்பனாா்கோவில் அருகே மாத்தூரில் 2 குடிசைகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையாகின.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

மாத்தூா் ஊராட்சி ஏரி ஓடை தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மனைவி கோவிந்தம்மாள் (60). குடிசை வீட்டில் வசித்து வந்தாா். வெள்ளிக்கிழமை கோவிந்தம்மாள் விவசாய வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த மாரியப்பன் (40) என்பவரின் குடிசையும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. 

தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 ஆயிரம் மற்றும் அரிசி, புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 15 ஆயிரம் மற்றும் அரிசி, புடவை, பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, ஆறுதல் கூறினாா். 

ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணைத் தலைவா் பாஸ்கரன், திமுக மத்திய ஒன்றிய செயலாளா் அமுா்த விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com