சுருக்குமடி வலை பயன்பாட்டை கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம்: நாகை, காரைக்கால் மீனவா்கள் அறிவிப்பு
சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்தி, ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் முடிவு செய்துள்ளனா்.
நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் மீனவ கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், இதுவரை நடைமுறையில் உள்ளது போல இனிவரும் காலங்களிலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக் கூடாது.
நாகை, மாயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 24) அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி சுருக்குமடி வலை பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வலியுறுத்துவது, மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.