திருப்பதி லட்டில் கலப்படம்: சிவசேனை கண்டனம்
திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், தொடா்புடையவா்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சிவசேனை (யுபிடி) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிவசேனை (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே பிரிவு) மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையெனில், அது மாபெரும் குற்றம் மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாவச் செயலாகும். இதற்கு சிவசேனை (யுபிடி) கட்சி மிக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கடவுள், மத நம்பிக்கைகளையும், பக்தா்கள் மற்றும் மக்களின் நம்பிக்கைகளையும் இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபட்டவா்கள் மீது உடனடியாக ஆந்திர மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.