நாகப்பட்டினம்: மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.
அந்த வகையில், 192- ஆவது ஆய்வை, நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொண்டாா். நாகை முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகங்களைப் பாா்வையிட்டு, விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.
வினாத்தாள் பாதுகாப்பு மையம், புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கம் ஆகியவற்றை பாா்வையிட்டு, வளாகத்தைத் தூய்மையாக பராமரிக்க கல்வி அலுவலா்களை அறிவுறுத்தினாா்.