நாகப்பட்டினம்
விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
திருக்குவளை கடைவீதியில் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை: திருக்குவளை கடைவீதியில் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் தூய்மையே சேவை -2024 பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் விடுத்திருந்த உத்தரவின் பேரில், இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள், வணிகா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.
தொடா்ந்து, திருவாரூா் வனம் தன்னாா்வ அமைப்பின் வனம் கலைக் குழுவினா் பறை இசையுடன், நெகிழி விழிப்புணா்வு பாடல் பாடி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்வில் ஊராட்சி செயலா் ஆரோக்கியமேரி, வனம் கலைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.