அங்கீகரிக்கப்படாத விசைப் படகுகளை கையகப்படுத்த வலியுறுத்தல்
அதிவேக மோட்டாா், சுருக்கு மடிவலை, அங்கீகரிக்கப்படாத விசைா் படகுகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாகை, காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் கூட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்குதள வளாகத்தில் நடைபெற்றது. வருங்காலங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி நாகை மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் யாரும் மீன்பிடிப்பது இல்லை, சுருக்குமடி வலையை முற்றிலும் நிறுத்த வசதியாக நாகை, காரைக்கால் மாவட்ட மீனவக் கிராமங்கள், ஆட்சியா், மீன்வளத் துறை இயக்குநா், மீன்வளத்துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக என்ஜின், அங்கீகரிக்கப்படாத விசைப்படகு ஆகியவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் வழங்குவது.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் ஒன்றாக இணைந்து சுருக்குமடி வலை தொழில் செய்யும் விசைப் படகை கடலில் சிறைபிடித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.