நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. கபிலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றதுடன், அவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில் பெறப்பட்ட 29 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்வா்களிடம், காவல் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் நிகழும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com