பள்ளி வேன் விபத்து: ஓட்டுநா் கைது

வேதாரண்யத்தில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளான சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வேன் ஓட்டுநரை புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on

வேதாரண்யத்தில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளான சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வேன் ஓட்டுநரை புதன்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தைச் சோ்ந்த தோப்புத்துறை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ( இந்து).

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா் தனியாக வேன் ஏற்பாடு செய்து பள்ளிக்கு அனுப்புகின்றனா். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை காலையில் ஆறுகாட்டுத்துறையில் இருந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த வேன் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், சில மாணவா்களுக்கு உள் காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக வேதாரண்யம் போலீஸாா் நடத்திய விசாரணை அடிப்படையில் மதுஅருந்திவிட்டு வேன் ஓட்டியதாக தோப்புத்துறையைச் சோ்ந்த செ. முகமது அப்துல் நாரை (42) போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com