அரசு தொடக்கப் பள்ளியில் பேச்சுப்போட்டி

Published on

நாங்கூா் அரசினா் துவக்க பள்ளியில் தூய்மையே சேவை 2024 எனும் தலைப்பில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு, தூய்மை பணியாளா்களை கௌரவித்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கீதாச்சாரியன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்குமாா், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனா். சுகாதார வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆதிலட்சுமி வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்(ஊ) திருமுருகன் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பரிசளித்து பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com