கால்நடைகளுக்கான இணைத் தீவனக் கட்டி வழங்கும் விழா
நாகை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற கால்நடைகளுக்கான இணைத் தீவனக்கட்டி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி இணைந்து கால்நடைகளுக்கான இணைத் தீவனக்கட்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சென்னை நபாா்டு துணை பொதுமேலாளா் த. சுதிா், நாகை கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கால்நடைகளுக்கான இணைத் தீவனக் கட்டியை வெளியிட்டு, முதல்கட்டமாக 30 பயனாளிகளுக்கு வழங்கினாா்.
நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் மற்றும் தலைவா் சி. சுரேஷ், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி உதவி பொது மேலாளா் சு. விஸ்வந்த் கண்ணா, புதுக்கோட்டை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சிவங்கி மேலாளா் ரா. தீபக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.