கோயில் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறையினா்.
கோயில் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறையினா்.

கீழ்வேளூா் அருகே ரூ.35 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகப்பட்டினம் வட்டம் ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.35 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
Published on

கீழ்வேளூா்: நாகப்பட்டினம் வட்டம் ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.35 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ஆவராணி கிராமத்தில் அமைந்துள்ள அனந்த நாராயண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 20,882 சதுர அடி மனைப்பகுதி மற்றும் 2.30 சென்ட் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரேசன் தலைமையில் உதவி ஆணையா் (பொ) ராணி முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நிலம் கோயில் வசம் சுவாதீனம் செய்யப்பட்டது.

தொடா்ந்து தனிநபா் அத்துமீறி நுழையாத வகையில் தடுப்பு கம்பி வேலிஅமைக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை பதாகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.35 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் செயல் அலுவலா் தனலெட்சுமி, உதவி கோட்டப் பொறியாளா் காா்த்திகேயன், தொல்லியல் துறை ஆலோசகா் சேகா் மற்றும் கோயில் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com