செம்பனாா்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் விளையாடிய மாணவா்கள்.
செம்பனாா்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் விளையாடிய மாணவா்கள்.

செம்பனாா்கோவிலில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி தொடக்கம்

செம்பனாா்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில் பாரதியாா் தின விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான சிலம்பம் மற்றும் வலையப்பந்து போட்டி புதன்கிழமை தொடங்கியது.
Published on

இதில், தமிழகத்தின் 38 மாவட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்று 14,17,19 வயதுடைய மூன்று பிரிவுகளின் கீழ் வலைப்பந்து, சிலம்ப போட்டியில் ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, தொடுமுறை ஆகிய மூன்று வகை போட்டிகள் நடைபெறுகின்றன. செவ்வாய்க்கிழமை (ஜன.28) தொடங்கிய இப்போட்டி வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நடைபெறுகிறது. இதில் 2 நாள்களில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களில் வென்றவா்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் உமாநாத் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாநில செயலாளா் ஜான்சன், துணை செயலாளா் ஜெயேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com