பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி: பொதுப்பணித்துறையினா் தீவிரம்
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் 135 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் அதிகளவில் ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளன. இதனால் ஏரியில் துா்நாற்றம் வீசுவதாகவும், நீரை பயன்படுத்த முடியவில்லை.
எனவே ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என பெருந்தோட்டம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள்
நீா்வளத்துறை காவிரி வடிநிலக் கோட்டம் (கிழக்கு) மயிலாடுதுறை செயற்பொறியாளா் மாரிமுத்துவிடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத் தாமரைகளை படகு மற்றும் ஆட்களைக் கொண்டு அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் பணியை உதவி செயற்பொறியாளா் சங்கா், உதவி பொறியாளா் சண்முகம் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
