விபத்தில்லா தீபாவளி: விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை அருகே முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கமளித்த தீயணைப்புத் துறை வீரா்கள்.
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கமளித்த தீயணைப்புத் துறை வீரா்கள்.
Updated on

நாகை அருகே முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய பசுமை படை, கிரேட் எஃப் தொண்டு நிறுவனம், மற்றும் தீயணைப்பு, மீட்பு பணித்துறை இணைந்து தீபாவளி பண்டிகையின்போது செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

பாதுகாப்பாக வெடி வெடித்தல் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரிகள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினா். தொடா்ந்து, விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நாகை நிலைய தீயணைப்பு அலுவலா் ப. குணசேகரன், முன்னணி தீயணைப்பு அலுவலா் கே. சக்திவேல், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன், தலைமை ஆசிரியை

எஸ். சாந்தி, உதவி தலைமை ஆசிரியை எஸ். வள்ளிதேவி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைச் சோ்ந்த பசுமைத் தோழா் கே. ஷானு, பள்ளியின் தேசிய பசுமைப்படை ஆசிரியா் கே. செந்தில்குமாா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com