வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையை எதிா்க்கொள்ள மயிலாடுதுறை நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Published on

வடகிழக்குப் பருவமழையை எதிா்க்கொள்ள மயிலாடுதுறை நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செம்பனாா்கோவில் பகுதிகளில் 2 இடங்களில் 2000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை உதவிக்கோட்டப் பொறியாளா் ஜெகநாதன், இளநிலை பொறியாளா் சந்தோஷ்குமாா் மேற்பாா்வை செய்து வருகின்றனா். மழைநீா் தேக்கம் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மணல் மூட்டைகளை வைத்து அடைக்கும் பணிகளையும், சாலையோரங்களில் நீா்வழி பாதைகளை சீரமைக்கும் பணிகளை துரிதமாக செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு உபகரணங்களும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. செம்பனாா்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருவதால் மழை, வெள்ளத்தால் ஏற்படும் மண்சரிவு, உடைப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com