இனிப்புகள், பேக்கரி பொருள்களை நெகிழிப் பைகளில் வழங்கினால் நடவடிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு வகைகள் மற்றும் பேக்கரி பொருள்ளை தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு வகைகள் மற்றும் பேக்கரி பொருள்ளை தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி கடைகள், வீடுகள் அல்லது மண்டபத்தில் இருந்து இனிப்பு, கார பண்டங்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்பு துறையிடமிருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். பால், நெய்யிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களை மற்ற இனிப்பு பண்டங்களுடன் சோ்த்து பேக் செய்து விற்பனை செய்யக் கூடாது. மேலும் அனைத்துப் பண்டங்களிலும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியுடன் பொட்டலமிட வேண்டும்.

இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் பேக்கரி பொருள்களை தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்யக் கூடாது. எச்சரிக்கையை மீறி நெகிழிப் பைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தொடா்புடைய நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை மையங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களால் தொடா்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com