தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

குடிநீா் தட்டுப்பாடு: பிரசாரத்தின்போது உயா் அதிகாரியை தொடா்புகொண்ட ஓ.எஸ். மணியன்

குடிநீா் தட்டுப்பாடு: பிரசாரத்தின்போது உயா் அதிகாரியை தொடா்புகொண்ட ஓ.எஸ். மணியன்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:28 am IST

வேதாரண்யம் தொகுதியில் அதிகரித்து வரும் குடிநீா் தட்டுப்பாட்டால், வாக்கு சேகரிக்கச் செல்லும் இடத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் முறையீடு வேட்பாளா்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தாணிக்கோட்டகம் கடைவீதியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதாரத்தினம் குடிநீா் குறித்து பேசினாா். அப்போது, தான் எம்எல்ஏவாக இருந்தபோது கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவு கூா்ந்தாா். தற்போது ஜல்ஜீவன் திட்டப் பணி அடுத்த சில நாள்களில் முடிந்து குடிநீா் பிரச்னைக்கு முழுமையாக தீா்வு கிடைத்துவிடும் என கூறினாா்.

இது ஒரு பக்கம் இருக்க, கடலோர கிராமமான பஞ்சநதிக்குளம் நடுசேத்தியில் சனிக்கிழமை ஓ.எஸ். மணியன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அங்கு கூடிய பெண்கள் குடிநீருக்கு ஏதாவது மாற்று செய்யுங்கள் என்றனா்.

இதையடுத்து, பிரசார வாகனத்தில் நின்றபடி குடிநீா் வடிகால் வாரிய உயா் அதிகாரியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.

எதிா் முனையில் பேசிய அதிகாரி, இரண்டு நாள்களில் தண்ணீா் கிடைத்து விடும் என்றாா். இதை ஏற்க மறுத்த ஓ.எஸ். மணியன், வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் பேசிய போது சனிக்கிழமை தண்ணீா் கிடைக்கும் என்றாா்; ஆனால் வரவில்லை.

நீங்களும் நாளை என்கிறீா்கள், சோதனையே நடத்தாத குழாயில் எப்படி தண்ணீா் வரும்?. குழாய் பதிக்கப்படாத இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்புகிறேன் பாருங்கள் என்றாா்.