வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

இளைஞா் அடித்துக் கொலை

வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் சனிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:05 am IST

வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் சனிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கத்தரிப்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்திலிங்கம் மகன் செந்தில்குமாா் (28). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரனுக்கும் மதுக்கூடத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவுரிக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில் உள்ள நாகக்குடையான் ஓடை பகுதியில் செந்தில்குமாா் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

கரியாபட்டினம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.