குடவாசலில் குடும்பப் பிரச்னை காரணமாக, புதன்கிழமை ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (45). குடிப்பழக்கம் உள்ள இவர் நாள்தோறும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக அண்மையில் சந்திரசேகரன் மனைவி தனது தாய் வீடான புதுக்கோட்டை மாவட்டம் நெடுமரத்துக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், சந்திரசேகரன் தொலைபேசியில் மனைவியை வீட்டுக்கு அழைத்து, அவர் வராததால் மனமுடைந்து காணப்பட்ட சந்திரசேகரன் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.