சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 9 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலைய போலீ ஸார் வெள்ளிக்கிழமை சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வாளச்சேரிபாலத் தில் மோகன் (34), முத்துப்பேட்டை அருகே பட்டரைகுளம் பகுதியில் நாடிமுத்து (29), வெள்ள மதகு பகுதியில் மருதையன் மகன் கல்யாணசுந்தரம் (40), தில்லைவிளாகத்தில் கல்யாணசுந்தரம் (50), கீழுகொற்கையில் வைரக்கண்ணு (52), கந்தங்கங்குடி சோதனை ச்சாவடி அருகில் பாலதண்டபாணி (30), சாமிதுரை (45), சுகுமார் (28), வேலங்குடி சோதனைச் சாவடி அருகே நடராசன் (55) ஆகியோர் அனுமதியின்றி மதுபானம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் அனைவரையும் கைது செய்து அவர்க ளிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai