Enable Javscript for better performance
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்,  |   Published on : 01st June 2014 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்டத் தொழில் மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பு: திருவாரூர் காரைக்காட்டு தெருவில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வேலைவாய் ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2014-15 ம் நிதியா ண்டில் 67 நபர்களுக்கு கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் தகுதியான நபர்கள் நிறுவனம் அமைக்க முன்வந்தால் தனி நபருக்கு அதிக பட்சமாக, உற்பத்தி தொழில் நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம், சேவை சார்ந்த நிறுவன த்துக்கு ரூ. 3 லட்சம், வியாபாரம் சார்ந்த நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.

    அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலமும் கடன் பெற்று தொழில் துவங்கலாம். திட்டத்தில் கடன் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிரு க்க வேண்டும். பொது பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்டோ ர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டவர்கள், முன்னாள் படை வீ ரர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 18 முதல் 45 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சம் (கணவன் மற்றும் மனைவி வருமானம் உட் பட) வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருமானமானது நோட்டரி பப்ளிக் மூலம் உறுதி மொழி அளிக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருபவராக இருத்தல் வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிட சான்றிதழுடன் (மூன்றாண்டுகளுக்கு குறையாமல்) விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையு டன் விண்ணப்பத்தினை பெற்று பயனடையலாம்.

    விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய இணைப்புகள்: பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் (இரு நகல்களில்), உறுதி மொழி பத்திரம் (அசல் மற்றும் நகல்), குடும்ப அட்டை (இரு நகல்கள்), குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றி தழ் (இரு நகல்கள்), திட்ட அறிக்கை அசல் மற்றும் நகல், விலைப்பட்டியல் அசல் மற்றும் நகல், சாதிச்சான்றிதழ் (நகல்).

    திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10  சதவீதம் பொது பிரிவினரும், 5 சத வீதம் நலிவடைந்த பிரிவினரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், (பெ ண்கள்) முதலீடு செய்தல் வேண்டும். மொத்த திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானிம் வழ ங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04366-224402, 224403 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai