சுடச்சுட

    

    திருவாரூரில் வெள்ளிக்கிழமை வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோவை யாராவது திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி (43). இவர் தனது வீட்டு முன்பு ஆட்டோவை நிறுத்திவைத்துள்ளார். சனிக்கிழமை காலையில் பார்க்கும் போது மர்ம நபர்கள் யாரோ ஆட்டோவை திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமதுஅன்சாரி திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai