சுடச்சுட

    

    துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல்வரிடம் பரிசு பெற்ற காவலருக்கு எஸ்.பி பாராட்டு

    By திருவாரூர்  |   Published on : 01st June 2014 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவலர்களுக்கிடையேயான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக முத ல்வரிடம் பரிசு பெற்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகே ஷ்குமார் பாராட்டினார்.

    திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் மு. ஆனந்தன். இவர் கடந்த 24.2.2014 ல் அசாம் மாநிலம் திபு என்ற இடத்தில் நடைபெற்ற 14-வது அகில இந்திய காவ லர்களுக்கிடையேயான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழநாடு காவல்துறை சார்பில் பங் கேற்று 3-வது இடம் பிடித்தார்.

    இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல்துறையினருக்கு விழா வில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பங்கேற்று 3-மிடம் பிடி த்த காவலர் மு. ஆனந்தனுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கினார். முதல்வரிடம் பரிசு பெற்ற ஆனந்தனை சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

    தவிர, மாநில அளவில் சிறந்த புகைப்படம் எடுத்த, திருவாரூர் மாவட்ட காவல்துறையின ருக்கான புகைப்படக் கலைஞர் திருமால்பதி முதல்வரிடம் ரூ. 50,000 பரிசு பெற்றார். அவ ருக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது, தனிப்பிரிவு ஆய்வாளர் குருசாமி, ஆயுதப்படை ஆய்வாளர் எஸ். சோமசுந்தரம், சார்பு ஆய்வாளர் சிவசெந்தில்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai