Enable Javscript for better performance
மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு

    By மன்னார்குடி,  |   Published on : 01st June 2014 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே சனிக்கிழமை கோவில் திருவிழாவில் காவடி எடுத்து வரும் போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    கீழத்திருப்பாலக்குடி,கீழத்தெருவை சேர்ந்த பொதியப்பன் மகன் பாரதிராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் கணேசனுக்கும் நீண்ட நாள்களாக முன் விரோதம் இருந்து வந்ததாம்.இந்நிலையில் கீழத்தெருவில் உள்ள மாரியம்மன்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.சனிக்கிழமை இரவு பக்தர்கள் காவடி எடுத்து வந்த போது கணேசன் தரப்பினருக்கும் பாரதிராஜா தரப்பினருக்கும் திடீரென ஆயூதங்களுடன் மோதிக்கொண்டனராம்.

    இதில் பாரதிராஜா(23)அவரது தாய் தனம்(47) மற்றும் பெ.கணேசன்(50), க.ஆறுமுகம்(30),பெ.ராஜேந்திரன்(47),சுரேஷ்(30)ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை அடுத்து பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில்  பாரதிராஜா தரப்பில் பாரதிராஜா பொ.முரளி,பொ.ஆரோக்கியராஜ்,ரா.பொதியப்பன்,வெ.சக்திவேல் ஆகிய 5 பேர் மீதும்,கணேசன் தரப்பில் கணேசன்,பெ.ராஜேந்திரன்,க.ஆறுமுகம்,க.மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன் ஆரோக்கியராஜ்,பொதியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai